இரண்டு வரி வாழ்கை
புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை!
புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....
--------------------------------------------------------------------------------
அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே!
உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....
ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!
-------------------------------------------------------------------------------
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்!
ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!
-------------------------------------------------------------------------------
இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு.
காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.
---------------------------------------------------------------------------------
அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே.
உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே...
------------------------------------------------------------------------------------