தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம்

தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் இந்த வருடம் கொண்டாடப்பட்டது. அது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வெளிட்ட அறிக்கை. ஒவ்வொரு வருடமும் மார்ச் 4ம் தேதி தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் தொடர்ந்து பாதுகாப்பு வாரம் மற்றும் மாதம் அனுசரிக்கப்பட்டு பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இந்த வருடமும் 46வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் கொண்டாப்பட்டது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொழில் துறையின் வளர்ச்சி மூல காரணமாகும், தொழில் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், எனவே தொழிலாளர்கள் பணியில் ஈடுபடும் போது விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை தடுத்து தொழிலாளர்களை பாதுகாப்பது நிர்வாகத்தினரது தலையாய கடமையாகும்.

தொழிலாளர்களின் பாதுகாப்பு மேலோங்கவும், சுற்றுசுழல் மாசுபடாமல் தொழிலகங்கள் இயங்கவும், தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிந்து, பாதுகாப்புடன் கூடிய உற்பத்தியினைப் பெருக்கி தொழில் வளம் சிறக்கவும், நம் மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எழுதியவர் : (18-Jan-18, 10:25 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2384

சிறந்த கட்டுரைகள்

மேலே