காலம் கடந்த நம் காதல்

உன் மெல்லிய உதடு கொண்டு மென்மையாய்
என் கன்னம் தீண்டும் பொழுதெல்லாம்
பல லட்சம் மோகக்கடலில்
மூழ்கித்திளைக்குதே என் உள்ளம் !!

என் கண்கள் கட்டி - விரல்கள் கோர்த்து
உன் ஆசை மொத்தம் நீ பேசவே
ஓயாத காதல் புயல்
என் சின்னஞ்சிறு இதயத்தில்
மையல்கொண்டு வீசுதே !!

என்னை கடந்து சென்று
கடைவிழி பார்வை வீசும் பொழுது
உன் சிலைஅழகில் நினைவிழந்து நிற்கிறேன்
பலகோடி மணித்துளிகள் கடந்து !!

என் காது மடல்களை
உன் மூச்சுக்காற்று வருடும் நேரம்
என் ஆண்மையில் மென்மை கலந்து
மெல்ல மெல்ல ரத்தம் சூடேறும் !!

காந்த பார்வையால் வலை வீசி
இழுக்கும் உன் மோகம்
உன்னை பருக எண்ணி நெருங்கி வர
நீ கொடுக்கும் முத்தம் என்னும் ஒற்றை மழைத்துளி
தீர்க்குமோ என் காதல் தாகம் !!

உன் தேகம் முழுக்க
என் உதடென்னும் தூரிகை கொண்டு
நான் வரையும் ஓவியம்
காலங்கள் பல கழிந்தாலும்
என் உள்ளம் மீண்டும் மீண்டும்
படிக்கத் துடிக்கும் காவியம் !!

பொய் உடைகள் களைந்து
மெய் உடல்கள் புணரும் பொழுது
நாணத்தால் உன் கைகள் முகம் மறைக்கும்
நரைகள் முளைத்து
நடைகள் தளர்ந்தாலும்
உன் மீது நான் கொண்ட தீரா மோகம்
என்றென்றும் அதை நினைக்கும் !!

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (20-Jan-18, 12:18 am)
பார்வை : 729

மேலே