என்னவள் நினைவுடன் நான்

***செடியில் பூக்கும் மலராய் சிரித்து போகிறேன்,,,
நீ என்னுடன் இருக்கிறாய் என்று மகிழ்ந்து...

****தலையணை மீது தூங்கிப் போகிறேன்,,,,
உன் மடியென சுகமாய் படுத்து படுத்து....

****காயவைத்த உடையாய் காய்ந்து போகிறேன்,,,,
உன் நினைவேணும் ஈரத்தை தவிர்த்து.....

****புயலென எவையும் புரட்டி போகிறேன்,,,,
உன்னுடன் பழகிய நாட்களை நினைத்து.....

****கடலின் அலையாய் குலுங்கிப் போகிறேன்,,,,
உனக்காக வரைந்த வரிகளைப் படித்து....

எழுதியவர் : மு நாகராஜ் (20-Jan-18, 10:54 pm)
பார்வை : 529

மேலே