வைரமுத்து என்கிற வைரம் தீட்டப்படுகிறான்

வைரமுத்து என்கிற வைரம் தீட்டப்படுகிறான் .

வைரமுத்து என்கிற வைரம் தீட்டப்படுகிறான் .
கொள்ளுப்பட்டறையில் அடிபட்டதால்தானே
கொழு கலப்பை உழவுக்குவருகிறது..
அடிமேல் அடி வாங்கித்தானே
அரிவாள் பயனுக்கு வந்தது நற்கதிரருக்க.
வெந்து கொதித்தால்தானே
வெள்ளரிசி உண்ண அன்னமாகிறது.
வைரமுத்து வாங்கும்
வசையடியாவும்
மங்காத தமிழுக்கு
மெருகு சேர்க்கும்
மொத்துக்களே.
கவிப்பேரரசு
காவியப்பேரரசாகிறான்
காவிய நாயகனாகிறான்.
ஏதோ ஒரு கூட்டம்
ஏசுவை அறைந்ததால்தானே
எங்கோ பிறந்த ஏசு
இவ்வுலகின் இரட்சகனான் .
ஏனோ ஓர் கயவன்
எங்கள் மோகன் தாசை
மோசத்தில் சதிசெய்து கொன்றதால்தானே
மோகன்தாசு ஆனான் மகாத்மாவாய், தேசபிதாவாய்..
வனவாச கொடுமைக்குப்பின் தானே
கடவுளானான் இராமன்.
கல்லடி பட்டுத்தான்
கருணைஉருவானான் முகமது நபி.
உன்மீது விழுகின்ற
ஓவ்வொரு கல்லும் முள்ளும்
தமிழ்மீது விழுகின்ற உராய்வு.
தமிழை அழிக்க நினைத்தவரை
வாழவைத்து
வாழ்கின்ற தமிழாய்
வாழ்வாய் நீ
வைரமுத்து நீ
தமிழ் வளர்த்து வாழிய நீ!

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (21-Jan-18, 12:19 am)
பார்வை : 93

மேலே