மாமாவின் ப்ரியங்களுக்குரியவனே - ஹேப்பி பெர்த் டே டா - சுதர்ஷன்
மாமாவின் ப்ரியங்களுக்குரியவனே - ஹேப்பி பெர்த் டே டா - சுதர்ஷன்
கொஞ்சம் தாமதமாகத்தான் அவளுக்கு கரு உண்டாச்சு, நா கொஞ்சம் வளரும்வரை அவ படிப்புன்னு சொல்லி அவளோட ஆசையை அவ புகுந்த வீட்டோட ஆசைகளை தள்ளிப்போட்டுக்கிட்டே வந்துட்டா
இதை புரியும் வயசு எனக்கு வந்தப்போ, ரொம்ப வருத்தப்பட்டேன், இதுவரைக்கும் சுயநலம் என்கிற வார்த்தைக்குள் அடைப்பட்டிருக்க விரும்பாம இருந்தபோதும், அவளோட தியாகம் எனக்கு கண்ணீரை
கொடுத்துச்சு,
அழுதுகிட்டே சொன்னேன், எவ்ளோதான் கைம்மாறு பாக்கி வைக்கிற நீ ன்னு, கோடி கோடியா கொட்டிக்கொடுத்தாலும் அவளோட தியாகத்துக்கு ஈடாகாது
எனக்குத் தெரிஞ்சு அவ அவளோட வாழ்நாள் ல முக்காவாசி நல்லா தூங்கிருக்கக்கூட மாட்டா
என்னைப்பத்தியும் என்னோட காலங்களைப்பத்தியும் அவளோட யோசனைகள் கடந்துதான்
அதிகமா இருக்கும்,,இன்னமும் சொல்லுவேன் கண்ணு உள்ள போயிருக்குப்பாரு ன்னு சிரிச்சுகிட்டே
சொல்லும்போது எதையாவது சொல்லி சிரிச்சு சமாளிப்பது அவளுக்கும் அப்பா இருந்தவரை அவருக்கான வழக்கமா இருந்துச்சுன்னே சொல்லலாம்
மாமியார் மாமனாரின், நாத்தனார் ஓரகத்திகளின் பேச்சை விழுங்க அவளுக்கு துணையா இருந்தது
அவளோட கணவன், அப்பப்போ கொஞ்சம் கஞ்சூஸ் ன்னு அவரை அங்கதம் செஞ்சிக்கிட்டாலும்
மனசு முழுக்க ஒரு விஷயத்தை நினைக்கிறப்போ, நெகிழும்படியே ரெண்டு பேரும் செய்திருக்காங்க
எங்கப்பாவுக்கு எனக்கும், அவளுக்கொரு குழந்தை பிறக்க நான்தான் என்மேலே அவ வச்ச அன்புதான்
காரணம் ன்னு அவ மாமனார் மாமியார் சொன்னப்போ, வயித்துல இனம் தெரியாத வலி, அம்மா இல்லன்னு தெரியாதவரை, அவளைத்தான் அம்மான்னு இருந்திருப்பேன், அதுக்குப்பின்னாலான
அவளோட தியாகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்னு தான், அவளை தேடுறதை நிறுத்திட்டேன்
லேட்டா கர்பம் தரிச்சதால அடிக்கடி அவளோட உடல்நிலையை கொஞ்சம் அதிகமா கவனிக்கவேண்டி
இருந்துச்சு, அவ ஒரு உறுதியில இருந்தா ,,,, அவன் அவளோட வயித்துல கருவானப்போவே, தாய்மாமன் உறவு ன்ன என்னன்னு சொல்லி அழுதுகிட்டிருப்பான்னு அக்கா ஓட ஹஸ்பண்ட் மிஸ்டர் துறை கொஞ்சம் மத்தியபான ளகரியில இருக்கிறப்போல்லாம் அடிக்கடி சொல்லி பீல் பண்ணுவாரு ... இதுவரை அவரை மாமான்னு கூபிடதே இல்லை மிஸ்டர் துரைஸ் ன்னு கூப்டுத்தான் பழக்கம்....
அவ அவளோட வீட்டுல நிறைய அறைகூவல்களோட மத்தியில குத்திக்காட்டல்களுக்கு இடையில வாழ்ந்துக்கிட்டிருந்திருக்கா, தன்னோட உணர்வுகளை எரிச்சிக்கிட்டிருக்கா ன்னு எனக்கு புரிஞ்சுகிட்ட வயசுல தான் அவ கர்பமானா ,, அப்போதும் அவளுக்கு நான்தான் முதல் குழந்தை... ஆனால் நான் அவகிட்ட இருந்து அதுக்கப்புறம் முற்றிலுமா விலகி இருந்தேன் அதை அவளால தாங்கிக்க முடியல அதனாலேயே அவளுக்கு அந்த நேரத்தில் உடல் நிலை கொஞ்சம் அதிகமா கேர் எடுத்துக்க வேண்டி வந்துச்சு
ஆறாவது மாசத்துல கொஞ்சம் ப்ளீடிங் தெரியுதுன்னு டாக்டர்ஸ் சொன்னப்போ ,,, அதுவரைக்கும் கடவுள் கிட்ட போகாதவன் ,, வெறுப்புதான்னு வச்சுக்கோங்களேன் அவன்கிட்ட போயி கெஞ்சுனாலும் எதையுமே
எனக்கு முழுசா குடுக்காதவன்கிட்ட ஏன் என்னோட கௌரவத்தை அவன் காலடிக்கு கீழ வைக்கன்னு ஒரு போர்
ஆனா ,, அப்போ எனக்கு வேறே வழி தெரியல,,நல்லா நினைவிருக்கு .. ஆன்மீக மலர் ல தஞ்சாவூரில்
திருக்கருகாவூர் என்கிற ஊருல முல்லைவள நாதர் கோயிலிருக்கும்,, அந்த ஸ்தலத்தில் கர்பரக்ஷம்பிகா அம்மன் குழந்தை வரம், குழந்தை நலம் வேண்டி வருவோருக்கு அருள் பாலிக்கிறாள் என படிக்கக்கண்டு
அப்பாவை அவகிட்ட சொல்ல சொல்லி அவ வீட்ல பெர்மிஷன் வாங்கி எவ்ளவோ தடங்கலுக்கு அப்புறம்
எல்லோரும் போனோம்,,,
முல்லைவள நாதரை கும்பிட கூட பொறுமையற்ற நிலையில் நின்றிருந்தேன், கவனம் பூராவும் அவளும் எங்க வீட்டுக்கு காலடி எடுத்துவைக்கப்போற முதல் குட்டி உறவைப்பத்தியுமே இருந்துச்சு
ஒரு வழியா முல்லைவள நாதர் தரிசனம் முடிஞ்சு கர்பரக்ஷஅம்பிகையை தரிசிக்க போனோம்
தேங்காய் பழம் பூ வாங்கிண்டு, சுத்த நெய் அரைக்கிலோ எடுத்துக்கிட்டு ஆலயவழிப்பாட்டுக்கு சரியான நேரத்தில போயி நின்னோம் அம்பாளோட கர்பகிரகம் மட்டுமில்லை இப்போ எல்லாம் முக்கால் வாசி எல்லா கோயிலிலும் கர்ப கிரகத்தை சரியாகவே பராமரிப்பது இல்லை, காணிக்கை என்கிற பெயரில், டொனேஷன் என்கிற பெயரில், அன்னதானம் என்கிற பெயரில் செய்யும் வியாபாரம் கண் முன்னே வந்து போயினும், அடுத்தநொடி சுதாரித்துக்கொண்டு அம்பாளை மனமுருக வேண்டி நின்றேன்
பரிகாரம்
தூய நெய்யை அம்பாளோட கர்பகிரகத்துக்குள்ள சென்று அவ வயித்துல மூன்று நான்கு முறை
மனமுருக பிரார்த்தித்து தடவிவிட்டு பின்ன தடவியத்திலிருந்து சொச்சத்தை எடுத்து டப்பாவில் இருக்குற நெய்யோட நன்னாற கலந்து அதை நாப்பத்தெட்டு நாள் உண்டோமானா, குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு குழந்தை கருவுறும் என்பதும், குழந்தை நலம் வேண்டுவோருக்கு அம்பாள்
குழந்தை நலம் பேணுவாள் என்பதும், ஓலைச்சுவடியில் மூலமா அஞ்சுகிட்ட விஷயம்,, ஆனா அங்க வந்து போறவங்க எல்லோரும் அம்பாளோட அங்க விக்கிற நெய் வாங்கி கர்பகிரகத்துக்குள்ள போகாம
கர்பகிரகத்து வாசப்படியிலேயே கோலம் வரைஞ்சு அதை எடுத்து ப்ரஸாதன்னத்தோட சேர்த்து நாப்பத்தெட்டு நாள் சாப்பிடுறதா சொல்றாங்க, நான் அவளோட பிரசவத்தில் எந்த சிக்கலும் வரக்கூடாதுன்னு மீண்டுமொருமுறை பிரகாரத்து பண்டிதராண்டம் கேட்டுப்பார்த்தேன், அவரும் நாங்க சொன்னதையே சொன்னார் ஆனா இப்போல்லாம் யாரையும் கர்ப கிரகத்துக்குள்ள அனுமதிக்கிறது இல்லை ன்னு சொன்னப்போ எப்படியேனும் போகணுமே ன்னு கேட்டப்போ அங்கேயும் வியாபாரமே நடந்துச்சு,, பூசாரி மனம் குளுரட்டுமே ன்னு அம்பாளை வேண்டிக்கிட்டு கொடுக்கும்போதே,, அதுக்கான தண்டனையை எனக்கே கொடுத்துக்கோ ன்னு வேண்டிகிட்டேன் அவகிட்ட,, அவளை மெல்ல உள்ள அழைச்சுக்கிட்டு போயி மனமுருக வேண்டிக்கோ ன்னு சொன்னாரு அய்யர்,,அய்யருக்கு காசு கொடுத்தது என்னமோ எனக்கு குத்திகிட்டே இருந்துச்சு ஆனாலும் என் பிரார்த்தனையை பலப்படுத்திக்கிட்டேன் , இதன் மூலமா என்ன நேர்ந்தாலும் அது மொத்தத்தையும் எனக்கே கொடு ன்னு அவகிட்ட சொல்லிகிட்டே இருந்தேன்,, பிறகு வெளிய வந்துட்டு அந்த கோயிலை சுத்தி பாக்குறப்போ
பிள்ளை இல்லாதவங்க அரச மரத்தை எப்போ எல்லாம் சுத்தணும் என்கிற குறிப்பேட்டில் கொஞ்ச நாழி
இலயித்திருந்துவிட்டு அங்க இருந்து திருச்சி வந்து ... அப்பாவோட நண்பர் வீட்டில் தங்கினோம் அன்று
அப்போதும் மனசெல்லாம் ஏதோ போல இருந்துச்சு... எல்லோரையும் இங்கயே இருக்க சொல்லிட்டு ஸ்ரீரங்கனை போயி மனசு தேத்திக்க ஒரு தரிசனம் பண்ணிட்டு விபூதி பிரசாதம் எடுத்துட்டு வந்து
அவளுக்கு பூசி விட்டேன்
அப்படி பிறந்தவன் அவன் அவனுக்கு சுதர்சனன் ன்னு பேரு நான்தான் வச்சேன், ஜனவரி இருபத்தொண்ணு 2001 ஒரு விடிய காத்தால சூரிய உதயத்துக்கு முன்னால பிறந்தான்
அவனுக்கு பதினெட்டு வயசு முடியுறது
அவனுக்கான நேர்த்தி இன்னமும் செய்யுறேன், அவ வயித்துக்குள்ள இருக்கும்போதே
அவள் சொல்லி சொல்லி அவன் வளர்ந்ததாலேயோ என்னமோ,, அவங்க வீட்டாளுங்களை விட
என்மேலே உயிரா இருக்கான் எது வேணும்னாலும் எனக்கே சொல்லி வாங்கிப்பான் இன்னையவரையிலும் என் குழந்தைகளுக்கு முன்னால அவனே முன்னிலை வகிக்கிறான்
என் மனைவியை அன்பினால் ஆட்சி செய்றான்
கடந்த கொஞ்ச காலமா எனக்கு வியாபாரமும் விவசாயமும் கொஞ்சம் கட்டத்துல இருப்பதால
அவ அவன்கிட்ட சொல்லி வச்சிருக்கா,, தாத்தாவுக்கப்புறம் அவன் அவனுக்குன்னு எதுவுமே
செஞ்சுக்கிட்டதில்ல உனக்கும் எனக்கும்னுன்னே வாழ்ந்துட்டான், அவனுக்குன்னு நாம அன்பைத்தவிர எதுவுமே கொடுத்ததில்லை, இப்போ கொஞ்சநாள் அவன் சிரமத்துல இருக்கான்
அவனுக்கு பெரிய செலவொண்ணும் வைக்காதே ன்னு சொல்லி வச்சதை,,, அவன் என்கிட்டே ஒளிச்சு வைக்க முயற்சி பண்ணப்போ, அதே மிஸ்டர் துரைஸ் தான் கொஞ்சம் மத்திய லகரியில
உளறினார்
மனசுக்கு கஷ்டமா போச்சு,, நா எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் உனக்கும் அவளுக்குமான மாமன் முறையை குறையில்லாம செய்வேன் சுதர்சன்... நீ இந்த வருடம் ப்ரீ டிகிரி முடிஞ்சு யூஜி போற
மாமன் அவனோட ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் நான் கட்டிக்கிட்டவளுக்கும் எனக்கு பிறந்தவர்களுக்கும் முன்னால உனக்கும் என்னை வளர்த்த அவளுக்கும் என உங்க எல்லோருக்குமான
முறையை கடமையை என் வகைன்னு வரும்போது ..நா எந்நிலையில் இருந்தாலும் செய்திட தவறமாட்டேன் டா கண்ணு....
இம்முறை உன்கிட்ட நிறைய மெச்சூரிட்டி உணருறேன், மிதிவண்டியை வேகமாக மிதித்து பயணப்படுவதைப்போல காலம் எவ்ளோ வேகமா போயிடுச்சு இதோ பிறந்தது மாதிரி இருந்துச்சு...என்னுடைய எனக்கான உலகத்தில் உன்னுடைய வருகைதான், நான் எவ்வளவோ
வழி மாறி போயிருப்பினும்,, அதுக்குள்ளாற எனக்குன்னு ஒரு பொறுப்பை படிப்படியா
சொல்லிக்கொடுத்தது சுதர்சன்
தனிஷிமா தக்ஷின் பிறந்தப்போல இருந்து இப்போவாரை அவங்க மேலே நீ கொள்ளும் சிரத்தை
உன்கிட்ட இருந்து படிச்சதுதான் மாம் என்று இன்று நீ சொன்னபோது
இதைவிட வேறே எனக்கு என்ன வேணும் ம்ம்,,, என் கடமைகளை சொல்லிக்கொடுத்தவர்களில்
முதலாமவன் நீதான் ,,,நீ பிறந்து க்ருஷ்ண நவமி அடுத்திருக்கையில் தான் உனக்கு சுதர்சனா ன்னு
பேரு வச்சேன்
மாத்தி மாத்தி விட்டுக்கொடுக்காம இருக்கிற உங்க ரெண்டு பேரோட அன்பிலிருந்து விடுபெறும் தருணம் ன்னு ஒன்னு இருந்தா அது என் மரணமாத்தான் இருக்கும் கண்ணா
உனக்கு மட்டுமில்லை தக்ஷின் தனிஷிமா ரெண்டு பேருக்கும் கூட அறிவுரை செண்டிமெண்ட் சொல்லாமத்தான் வளர்த்திருப்பேன்...
இனி இந்த மாமனின் வகை உன் கல்யாணம் வரையும் நீளனும் ன்னு எனக்கு ஆசைடா
என் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நான் வாழணுமா ன்னு யோசிக்கவச்சதை தாண்டி, இன்று
எனக்காக இல்லை உங்களுக்காகவே என்னோட ஆயுள் நீட்டிக்கிறேன் வாழ ஆசைப்படுறேன்
லவ் யூ சுதர்ஷன்
"உன் மாம்ஸ்"