அறியாமையில்

புரியாது பேசேன்.
பேசினால் அர்த்தமுண்டு.
அறியாது போகும் சமுதாயத்தின் சிறுமைக்குக் காரணம் அறியாத ஞமலியாய் நாளும் இறைவா! என் ஈசனே! என்று வருந்திக் கிடக்கிறேன்.
என்னைக் காக்க அவன் உள்ளானென்று செயல்விட்டு சிறுமை களைந்து காயப்படுத்தும் வார்த்தைகள் என்னை நோக்கிப் பாய்ந்தாலும் பொறுமையாய் புன்னகை பூக்கிறேன்.
பூக்கும் புன்னகையில் ஆயிரம் அர்த்தம் உண்டு.
அதிலொன்று காயப்படுத்தும் இதயங்களுக்கு நன்றி...

கோபம் என்பது அர்த்தமற்றதாய் தோன்றுகிறது, அறியாமையில் மூழ்கிய மக்களின் மீது உண்டாகும் போது...

உடையில் ஒழுக்கம் தேடி அலையும் உலகமே, உன் உள்ளத்தில் எங்கே ஒழுக்கம்?

நிம்மதியாய் நானும் வாழமாட்டேன், பிறரையும் வாழவிடமாட்டேனென்று கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்களுக்கு என்ன மருந்து தருவேன்?

பத்துரூபாயைக் காண்பது கிடைப்பது கஷ்டமாக இருக்கும் காலத்தில் கிடைத்தது போதுமென்று கனவை விடுத்து நிம்மதியாய் வாழ்ந்தால் அங்கும் வந்து திருடனைப் பார்த்து போல் பார்வை வீசி எலும்பில்லா நாக்கில் தழும்பேற கிண்டலும், கேலியும் வீசிப்பார்க்கிறது,
நம் பொறுமை சோதிக்க...
இத்தகு கயமை எங்கு கற்றீர்களென்று கொஞ்சம் சொல்லிவிட்டு போங்களே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Jan-18, 8:10 pm)
Tanglish : ariyaamaiyil
பார்வை : 1034

மேலே