மழை

பருவம் மாறி பெய்யும் மழையே!
பூமி வறண்டு விட்டது என்று இப்போது வந்தாயா? இல்லை?
உன்னை மறந்து விட்டோம் - என
நினைத்து நினைவு படுத்த வந்தாயா?
பேய் மழையை நாங்கள் மறக்கவும் இல்லை!
"ஒக்கி" நிகழ்வை நாங்கள் இழக்கவும் இல்லை !
இதமானதுதான் சாரல் மழை!
இருந்தாலும் - என் விழி கண்ணீரால் நனைகிறது.
நீ கோவம் கொண்டு ஓங்கி வீசிய
ஒக்கியை எண்ணி.
மிதமான மழையே!
சினம் கொல்லாதே!
இணக்கம் காட்டு!