உணவு முறை

உணவு முறைகள்

உணவே மருந்தெனக் கொண்டான் தமிழன்
மருந்தே உணவென வாழ்ந்தான்

சித்தர் நமக்களித்த “பதார்த்தகுண சிந்தாமணி”
விளக்கும் அதுவோ பல தத்துவம் நமக்கினி

பாலுக்கோர் குணம், பருப்புக்கோர் குணம்
தண்ணீர், அரிசிக்கும் தனித்தனி குணம் தந்தே
உண்ணும் முறைவிளக்கினர் அவரே!

அம்மட்டுமன்றி வகைவகையாய் அரிசி,
பாலுக்கும் தனித்தனிவகை, பாங்குற கூறிநின்றார்.

மேலும் கூறினரே யார்யார்க்கெவ்வுணவென்றும்
கூறியே, பருவத்திற்கேற்ற உணவினையுமே
பகுத்தளித்தார் தரணியிலே

காலம் கடந்ததம்மா
காற்றினிலே பறக்கவிட்டே
உயரிய நாகரிக உணவை உண்டே நாம்

எண்ணற்ற நோய்தனையே எளிதாகப் பெற்றுத்தானே
அல்லல் உறுகின்றோம் அவனியிலே நாளுமே

பார்த்ததுமே உட்கொள்ளும் பரவசத்தை ஏற்படுத்தி
பண்டு பெரும் பழம் பெருமை தனைமாற்றி தவித்திடவே

விதவிதமாய் உணவுகள் வியக்கவைக்குக் சுவைகளுடன்
ஊரவைத்தே உமிழ்நீரை உவப்புடனே உண்ணவைத்தே
வாட்டி வதைத்திடுதே வயிற்றைப் போட்டுப் புரட்டிடுதே

விட்டோமா? அதன் சுவையை விடாப்பிடியாய் நம்மைப்
பற்றி நின்றே அதுதானே எட்டிச்செல்ல மறுக்கிறதே

வரகு, திணை, குதிரை வாலி, சாமை, இவையெல்லாம்
வாழ்விற்கு ஆதாரம் அதை நாமும் மறக்கலாமோ?

அமில உணவினையும், கார உணவினையும்
அறிந்துண்டால் அகன்றிடுமே இந்நாளின் பல நோயும்,

நார்ச்சத்து, புரதம் தவித்திடுவோம் பெரும்பாலும்
நீர்ச்சத்து ஏற்றிடுவோம் நீண்ட நாள் உயிர்வேண்டின்

வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி ,
கம்புக்களி போன்ற களியைச் சுவைத்திடுவோம்,
உடல் வன்மைப் பெற்றிடுவோம்
களிப்புற நாமே புத்துணர்வுடன் புவிமீதே.

ஊட்டத்திறன், உண்டாற்றல், உந்துசக்தி மீட்டுக் கொணர்ந்தே,
அற்புத நலம்பெற்றே சிறப்பாய் செயல்புரிவோம்

பதப்பட்ட உணவைத் துறப்போம்
இதமான உணவையே இனியாவதெடுப்போம்

தமிழினத்தை மீட்ப்போம், மனித நேயம் காப்போம்
மறுமலர்ச்சி புரிந்தே மறுவாழ்வு பெறுவோம்
மருந்தெதற்கு? இனி நமக்கு? சிந்திப்போம் செயல்படுவோம்
அன்புடன்,
ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி
தமிழாசிரியை,
கோயம்புத்தூர் 641022.

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி (22-Jan-18, 9:38 pm)
பார்வை : 148

மேலே