கல்வி வேண்டாம்

அறிவிற்கு தடை காட்டி
ஆசைக்கு வழிகாட்டும் கல்வி வேண்டாம்...
அறத்திற்கு குறை காட்டி
மதிப்பெண்ணிற்கு தளம்காட்டும் கல்வி வேண்டாம்...
பட்ட அறிவிற்கு தாழ் காட்டி
பட்டறிவிற்கு தாள்காட்டும் கல்வி வேண்டாம்...
பழக்கத்திற்கு நிழல் காட்டி
வழக்கத்திற்கு நிறம்காட்டும் கல்வி வேண்டாம்...

கற்று விற்றது கல்வி அல்ல
கற்று பெற்றது கல்வி என
தெரிவது எப்போது?
சுற்றம் தவிர்த்து பெற்றது கல்வி அல்ல
சுற்றம் தரித்து பெறுவது கல்வி என
தெரிவது எப்போது?
-விற்கும் இடத்தில் கற்போம் முடிந்த வரை.

எழுதியவர் : அர்ஜூன் (22-Jan-18, 8:39 pm)
Tanglish : kalvi ventaam
பார்வை : 1304

மேலே