ஏழைக்குடும்பம்

காலைமுதல் மாலைவரை
மூட்டைதூக்கும் அப்பா
மசங்கும் நேரம்வரை
வேலைபார்க்கும் அம்மா

வேண்டும் என்பதை
கேட்கும் பிள்ளை
வேண்டாமென்று ஒருபோதும்
சொன்னதே இல்லை

வேலைக்கு செல்லாவிடில்
கடன்காரன் வீட்டிற்குவருவான்
இப்படியும்ஒரு வாழ்க்கையாயென்று
பாராட்டுக்கள் நிறையதருவான்

கணவனுக்கும் மனைவிக்கும்
வாக்குவாதம் வந்தால்
மனம்நோகினால் - காரணம்
பணம் என்றுஅர்த்தம்

உழைத்து உழைத்து
இருவரும் ஓடானார்கள்
நடையாக நடந்து
வாழ்க்கையின் பாதச்சுவடானார்கள்

அன்றாடவருமானம் குறைவுதான்
அளவான குடும்பத்தில்தான்
அன்பான குடும்பத்தில்தான்
கிடைக்கும் மனநிறைவுதான் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (23-Jan-18, 11:28 am)
பார்வை : 72

மேலே