அழகோவியம்
கண்ணத்திலென்ன மச்சம்
உணர்வைகுடிக்குதடி
உயிர்மட்டுமே மிச்சம்
கூர்மையான ஈட்டியின்
இமைகொண்டுதாக்குகிறாய்
இதயத்தில் காதலைமூட்டி
கிளி மூக்கென்று
கூறலாகாது
அதனினும்அழகுந்தன் இருதுளைபுல்லாங்குழல்
வளைந்த
வானவில்லில் படிந்த
வண்ணமென்ன கருப்போ
கருவெந்நிற திராட்சையை
முதன்முதலாய்
கண்டேன் உன்விழியசைவில்
நிலவைக் காணவந்தேன்
உன்முகத்தைக்கண்டு
மெய்மறந்தேன் நண்பகலில்
மழைத்துளி வந்து
ஒட்டிக்கொண்டதோ
நெற்றியில் திலகவடிவில்
முத்தத்தின் எண்ணிக்கையை
அறியஉந்தன்
இதழ்களின் வரிகளைகணக்கிடு !...