விண்மீன்

விழியால் விழவைத்த
விண்மீன் அவள்தான்
விழாமல் என்னுள்வந்த
விளக்கொளியும் அவள்தான்
முத்தம் கொடுக்க
முடிவெடுத்து வருவாள்
முத்தம் கொடுக்காமலென்னை
முடக்குவதையும் நன்கறிவாள்
ஆடைகளை கலைய
ஆசையில்லை என்றவள்
ஆடவன் உனக்காககலைக்க
ஆசையுண்டு என்பாள்
இதயத்தின் துடிப்பிற்குள்
இணைந்தே வாழ்கிறாள்
இணைபிரியா வரம்வேண்டி
இறைவனிடம் வேண்டுகிறாள் !...