சாதனை

இளைஞனே
உன் வேகமும் விவேகமும்
நீருபூத்த நெருப்புபோல
உன்னுள் உறங்கிக்கொண்டிருக்கிறது
தட்டி எழுப்பு அது ஆயிரம்
குதிரைசக்தி திறன் கொண்டது
உலகத்தை நொடிகளில்
அளந்துகாட்டும் வள்ளமை படைத்தது
வாமனனுக்கு உலகையளக்க
மூன்றடி தேவைப்பட்டது
நீ நினைத்தால் உலகை
ஒரேயடியில் அளந்துவிடலாம்...

நிருபித்துக்காட்டு
உன் இளமையின்
மகத்துவத்தை இவ்வுலகிற்கு
உலகத்தில்
சாதனை படைத்தவர்கள்
சோதனைகளை சுட்டுவீழ்த்தியவர்கள்
தடைகளுக்கு மடைகள் போட்டு
விடைகள் சொன்னவர்கள்
உன் சக்தியை அடக்காதே
வெடிக்கச்செய் அதிலிருந்து ஆக்கசக்தி வெளியேறட்டும்...

புரட்சி விதைகள் தன்னுள் முளைத்தப்போது மாஜினிக்கு
வயது வெறும் பத்து
பதினைந்து வயதில்
சச்சின் உலகில் மிகச்சிறந்த
வேகப்பந்து வீச்சாளர்களின்
பந்துகளை திக்குதெரியாமல் பறக்கவிட்டான்
இருபத்தொரு வயதில் தன்னை
தலைச்சிறந்த கவிஞன் என
உலகிற்கு பட்டுக்கோட்டை அடையாளம் காட்டிக்கொண்டான்
முத்பத்திரண்டு வயதில்
மாவீரன் அலெக்சாண்டர்
உலகையே தன்னுடைய
குடைக்குள் கொண்டு வந்தான்
ஜான்கீட்ஸ் தன் உலகப்புகழ்
கவிதைகளை வெளியிட்டப்போது
வயது இருபத்துநான்கு
வாழ்க்கை ஒரு சோதனைகூடம்
அதில் நீ சாதனைகளை உருவாக்கிகாட்டு...

விதி ஆண்டவன் விதித்ததல்ல
நமக்கு நாமே எழுதிக்கொள்ளும்
இயலாமையின் வரிகள்
சோம்பலின் முத்திரைகள்
விதியை நம்பி வீனாகாதே
விதிக்கே ஒரு விதியெழுது
வீர நடைப்போட்டு உலகை ஆட்சி
செய்ய வா இளைஞனே வா...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Jan-18, 9:25 am)
Tanglish : saathanai
பார்வை : 3015

மேலே