பேரழகி

காதற்கரும்பே
கவிதை எறும்பே
என் நெஞ்சில் நிறைந்த
அன்பு அரும்பே!

சோம்பேறி என்னை
சுறுசுறுப்பூட்ட வந்த பெண்ணே
எனக்கு பிடித்த பேரழகி
நீதான் என்பேன்!

என்னைக் கண்டு ஓடுவதால்
விட்டுவிட மாட்டேன் நான்!

விலை உயர்ந்த மல்லியே
சூடிய தேவியே...
எவ்வளவு கொடுத்து வாங்கினாய் ?
வந்து நீ பறித்துக்கொள்
என் தோட்டத்தில்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Jan-18, 3:56 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : peralagi
பார்வை : 303

மேலே