அவள் எங்கே

வெண்பனி காலத்தில்
இதம் கொடுத்த தீ !!
எங்கு நோக்கினும்
எதிலும் நீ!
விடியல்கள் வேண்டாமே;
கனவுகளில் தான் நீ இருக்க,
இரவுகள் கொஞ்சம் நீளட்டுமே,
உன்னோடு நேரங்கள் கழிக்க---

ஊடல்கள் தீருமா?
அலர் நிலைக்குமா?
என் இன்பம் மீண்டும்
கிடைக்குமா?

கவிதையின் விதையாய்
நீ இருந்தாய்--------
தாள்கள் முழுவதும்
நீ நிறைந்தாய்!!!

கவலையில் கிடக்கிறேன்,
உனது நினைவுகளில்
திளைக்கிறேன்........
காலனை தினமும் அழைக்கிறேன்,
உன் மடியில் நீண்ட
உறக்கம் அவனிடம்
கேட்கிறேன்!!!!!

எழுதியவர் : மு.பிரனேஷ் (24-Jan-18, 6:45 pm)
சேர்த்தது : மு பிரனேஷ்
Tanglish : aval engae
பார்வை : 300

மேலே