முள் பறிக்கும் காந்திய ரோஜாக்கள்
உறங்காத சிங்கமாய்
அந்நிய குள்ளநரிகளை
வேட்டையாடிய
அஹிம்சை காவலனே ....!
ரத்த நதியையும் ...
வியர்வை கடலையும்
தியாகமாக்கிய
உண்மை சேவகனே ...!
அடிமை வர்க்கத்தை
தட்டி எழுப்பி
சுதந்திர சொர்க்கத்தை
எட்டிபறித்த
சுதந்திர புனிதனே ...!
தீண்டாமை பாவத்தை
நெருப்பாய் எதிர்த்து
சமத்துவ மோகத்தை
சங்கமமாய் புனைத்த
ஹரிஜன மகானே...!
புன்னகையின் உறைவிடம்
பாரத பூமியாக
கண்ணிரு மணிகளையும்
கன நேரம் நொடிக்காது ...
இதய துடிப்பாய்
இடைவிடாமல்
உழைத்து உழைத்து ...
ஊன்று கோலால் நிமிர்ந்த
செங்கோல் சூரியனே ....!
உனது
மரணத்தில் மடிந்தது
உயிருடல் மட்டுமல்ல
சமூக நியதிகளுமே ...!
ஆம் ...!
இன்று கத்தி எடுத்தவனே ...
தலைவன் ...
பொய் சொல்பவனே
ஹரிச்சந்திரன் ...!
ஏமாற்றுபவனே ...
கடவுள்...!
இன்னும் ... இன்னும் ...
எத்தனையோ ...!
இக்கோர நிலையை ...
எரித்திடும் முனைப்போடு
அக்னி விடியலாய் ....!
உன் பாதம்
பதிந்த பூமியில்
தேச நேசத்தை பூஜிக்கும் ...!
அஹிம்சை ஆக்சிசனை
சுவாசிக்கும் ....!
சர்வோதய தீபத்தை
யாசிக்கும் ...!
எமது காந்தியதுறை
வருடம் தவறாமல்
வளர்பிறை கண்மணிகளை
பிரசவிக்கின்றது ....!
உன்
சிந்தனை கருவையும்
தத்துவ மலரையும்
ஆச்சர்ய குறிகளாய்
விதைக்கின்றது ...!
இதனின்
தொடர் ஓட்டமாய் ...
எமது சகாக்களின்
பிரிவு பயணமும் ...
தொடருமேனும்
நம்பிக்கையோடு ....!
(ம. கண்ணன் ...
காந்தியதுறை ..
காந்தி கிராமம் )