வாட்ஸ் அப் உலகம்

வாட்ஸ் அப் உலகம்

புதியதாய் எதுவும் வந்தால்
ஆவலும் அதிகமாகும்

அன்றாட வாழ்க்கை தனில்
அமைதியாக வாழ்ந்து கொண்டு

எதிர்வரும் இன்னல்களை
எக்குத்தப்பாய் சாமாளித்து

குடும்ப பாசத்தை
கும்மாளம் போட்டு அனுபவித்து

பொய்யான சண்டைகளை
பொழுது போக்காய் நாம் நினைத்து

அன்புக்கான அர்த்தத்தை
அனுதினமும் ஆராதித்து

சின்னச்சின்ன ஊடல்களை
சிறிது நேரத்தில் நாம் மறந்து

அழகான வாழ்க்கை தன்னை
நாம் வாழ்ந்து கொண்டு இருக்கையிலே

ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தது
நம் கைபேசியின் துணையோடு

உறவாக வராமல்
நட்பின் போர்வையிலே

எப்பொழுதும் நம்மோடு
இனைந்து விட திட்டம் போட்டு

புது வரவாய் புகுந்தது தான்
"வாட்ஸ்அப்" எனும் மாபெரும் அரக்கன்

குடும்பத்தில் ஒன்றாய்
அனைவரிடமும் ஒட்டிக் கொண்டு

அனைவருக்கும் பாலமாய் அதுவும் இருந்திடவே

நாமும் போற்றிப் பாராட்டி
அதிக இடம் கொடுத்து விட்டோம்

நேருக்கு நேராய் பேசாமல்
நெருடல் தரும் சில விஷயங்களை

இதன் மூலம் பகிர்ந்திட்டோம்
இதமான மனதுடனே

எங்கோ தொலை தூரத்தில்
இருக்கும் நமது நட்பையும், உறவுகளையும்

நம் முன்னே இருக்கச் செய்து
நேரில் பார்ப்பது போல்

மன நிறைவை அடையச் செய்து
நம் மனதில் என்றும் நீங்கா இடம்

பெற்று விட்ட இந்த மாயாஜால
வித்தைதனில்

மயங்காத மானிடர் தான்
அகிலத்தில் எவரும் உண்டோ

இருப்பது உள்ளங்கை அளவு
வசிப்பது நம் பாக்கெட்டுகளில்

மனித இனத்தை ஆட்டிப்படைக்கும்
மற்றுமொரு அவதாரம் இதுவே

இது தரும் இன்ப உணர்வினிலே
இதற்கு நாம் அடிமையானோம்

இதில் பொதிந்திருக்கும் சாகசங்களில்
நம்மை அறியாமலேயே நாம்

மனமயங்கி விட்டோம்
நம் நிஜ வாழ்க்கையை நாம்
தொலைத்தும் விட்டோம்

ஒவ்வொரு நொடியும் நம்
உணர்வோடு கலந்திருக்கும்

இந்த மாயையிலிருந்து
விடிபடுவது எப்படி

இனி இது வேண்டவே வேண்டாம்
என ஒரு சமயம் நாம் தீர்மானித்தாலும்

அலைபாயும் மனதினிலே அது
மறபடியும் வந்து ஒட்டிக் கொள்ளும்

இதற்கு தீர்வுதான் என்ன
என நானும் யோசித்தேன்

எதற்கும் ஒரு தீர்வு உண்டு
எல்லாவற்றுக்கும் ஒரு விடை உண்டு

நம் கட்டுப்பாட்டில் இதை நாம்
வைத்துக் கொண்டு

அவசியம் என்றால் இதன்
உதவியை நாடி

மற்ற நேரங்களில் இதை
தவிர்த்திடுவோம்

தனது முக்கியத்துவம் சற்றே
சரிவதை கண்டு

நமக்கு அடிமையாகி நம் சொல்
கேட்டு

நம் காலடியில் வீழ்ந்து கிடக்கும்

இதுவே சரியான தீர்வு என்றால்
என்னையும் ஆமோதிப்பீர்

உங்கள் கருத்துகள் மூலம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (24-Jan-18, 8:11 pm)
பார்வை : 68

மேலே