கொலுசும், மெட்டியும் நடத்திய ஓர் கற்பனை உரையாடல்
ஒரு பெண் அணிந்த கொலுசுக்கும்
மெட்டிக்கும் யார் ஒசத்தி என்ற
பேச்சு முற்ற , கொலுசு சொல்லித்தாம்,
'அடியே மெட்டியே, இப்படி நீ
சிறந்தவள் என்று அலட்டிக்கொள்ளாதே,
என்னத்தான் நீ சொன்னாலும், நீ
என்னமோ கால் விரல்களில் தான்
கட்டுப்பட்டு கிடைக்கற.........நீ
உன் எஜமானி , புருஷன் கிட்ட அடங்கி
மிதிபட்டு கிடப்பது போல், அவள் காலில்
இருந்து மண்ணில் மிதிபட்டு கிடக்கிரையே..
நானோ பாங்காய் என் எஜமானி கணுக்காலில்
அமர்ந்து, அவள் அன்னமாய் நடக்க ஆடி
இசை தந்து மகிழ்கின்றேன்.......' என்றது
அதற்க்கு , மெட்டி சொல்லித்தாம் .
'காலில் மிதிப்பட்டாலும் , பெண்ணின்
மேன்மைக்கு என்னைத்தான் நினைப்பர்,
மணாளன் மணமகளுக்கு அவள் கால்
விரல்களில் திருமண நாளில் அணிவிப்பது நானே,
மங்கள அணி நான்............அன்னை சீதை
'கணையாழியாய் என்னை மதித்து
அந்த ராவணன் தூக்கி செல்லும் போது
சிறு துணியில் கட்டி தரையில் வீச,
வானர மன்னனும் கிட்கிந்தையில் அதை
கண்டெடுத்து...........ராமனிடம் காட்ட
......................ராமாயணம் வளர்ந்தது...
'சுந்தர காண்டமாய்'.............அனுமன்
'கணையாழிகொண்டு, இலங்கையிலிருந்து
அன்னை சீதையை கண்டு கொண்டு .....ராமனிடம்
'கண்டேன் சீதை பிராட்டியை' என்று சொன்னானே
இதை நீ அறியாயோ, இப்போது நீயே சொல்லு
'நம்மில் யார் உயர்வென்று...................
கொலுசு இப்போது வாய்பொத்தி தூங்கிவிட்டது
சத்தம் போடாமல் தன எஜமானியுடன்'''''''''''!