கனவுகள்

அரைத் தூக்கத்தில்
முண்டியடித்து முகம் காட்டும்
ஞாபக நினைவுகளில்
சோகங்களை உள்வாங்கி
சுகமாக்கிகொண்டேன்...
இரவுகள் இன்னும் விடியவில்லை
உடைந்துபோன கனவுகளை
கிழிந்து போன பைகளில்
அள்ளிக்கொண்டுபோகிறேன்....
நிகழ்கால வாழ்க்கையை
தீர்மானித்துக்கொண்டு
எதிர்கால கனவுகளை
சலவை செய்கிறேன்....