வெள்ளை காகிதம்

உன்னைப்பற்றி யாரும் எழுதாத தங்க வரிகளில்
கவிதை எழுத முற்பட்டேன் ! யாரோ
தாமரை எழுதிவிட்டார்! கொஞ்சம்
வன்மையாக எழுதுவோம் என்றால் அதை
வாலி எழுதிவிட்டு சென்று விட்டார்! எத்தனை
யுகம் கடந்தாலும் இல்லாத ஒரு கவிதை எழுத அதை
யுக பாரதி எழுதிவிட்டார்!
சிநேகமாய் ஒரு கவிதை எழுத அதை
சினேகன் எழுத !தங்கத்தை விட மதிப்பு வாய்ந்த
வைர வரிகளால் எழுத அதை
வைரமுத்து எழுதிவிட்டார்!
கொஞ்சம் காலம் தாழ்த்தினேன்
கார்க்கி எழுதிவிட்டார்!
மனதை திடப்படுத்தி யோசித்தேன் ........
கவிதைக்கு பொய் அழகு என்கிறார்கள் !
உண்மையாய் காதலித்தாலும்
பொய்யாக கவிதை சொன்னால் தான் காதலா.....
வேண்டாம் இந்த விசபரிட்சை ! உன்னைப்பற்றி
யாரும் சொல்லாத கவிதை வார்த்தை அலங்காரம் இல்லாமல் ....எனக்கு மட்டும் உன் முகம் தெரியும்
வெள்ளைக்காகிதம்!!!

எழுதியவர் : வாசு.ஜெயந்தன் ,நம்புதாளை . (27-Jan-18, 10:48 pm)
Tanglish : vellai kaakitham
பார்வை : 88

மேலே