விபத்து

ஓசை இல்லாமல் ...
ஒரு.... இறுதி ஊர்வலம் ...>>>>
குழந்தைகளின் ..கையில் ...
உயிருள்ள ...
விளையாட்டு பொம்மையாய்...!
விவசாயின் வாழ்வில் ...
பரிணாமத்தை ...
பரிசளிக்கும் பதுமையாய் ...!
வியாபாரியின் ..லாபத்தை ...
உச்சாணி கொம்பெற்றும் ...
பட்டு சரிகையாய் ..
மனித எண்ணங்களின் ...
வண்ணங்களை பறைசாற்றி ...
பறக்கும் வானவில்லாய் ...!
மலர் தெரியாமல் ...
மங்கி கிடக்கும்...
செடிகளின் நுனியில் ...
சிறகடிக்கும் உயிருள்ள மலராய் ...!
அழகின் மறுஉருவாய் ...
உலகில் ...
உலாவரும் ...
உயிர் அமுதே ....!
உமக்கு...
இயந்திர வாழ்வின் ...
சூட்சமம் ...
இன்னுமா விளங்கவில்லை ...!
ஆறறிவு கொண்ட மனிதனிடம் ...
உயிர் வாழ்வது ...
அவ்வளவு சாதாரணமா என்ன ....?
இன்னல் வருமென ...அறிந்தும் ...
மின்னல் வேகத்தில் வருவான் ...
உயிர் வேண்டுமானால் ...
கண்ணிமைக்கும் நேரத்தில் ...
வாகனத்தை கடந்துவிடு ...
இல்லையேல் ... உயிரை மறந்துவிடு ...
பட்டா நிலத்திற்காக ...
பச்சிளங்குழந்தையை கூட ...
கொல்லும் மனம் கொண்டவர்களின் ...
மரண பிடியில் ....
பட்டாம்பூச்சியின் ...கொலைக்கு ...
வக்காலத்து வாங்க ...
எவருமிலர் என்பதை ...அறிந்து கொள்வாயாக....!
சத்தம் போட்டு அழும்...
ஏழையின் குரலும்...
பணமெனும் ஓலை... இருந்தால் தான் ...
பஞ்சாயத்து வரையாவது... செல்கிறது ...
சத்தமில்லாமல் அழும்...
உம் குரலின் ஓசை ...
ஒருவர் காதிலும் விழப்போவதில்லை ...!
உந்தன் மரணம் ...
இந்த மண்ணின்...
மரணம் என்பதை ...
மறந்துவிட்டு வாழும் ...
மனிதர்கள் ..
மடியும் காலம் ...
வெகுதொலைவில் இல்லை .... ”