இன்று போலியோ சொட்டுமருந்து

இன்று போலியோ சொட்டு
அதை ஐந்து வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்கு விட்டு
போலியோ வைரசை
இந்த உலகைவிட்டே விரட்டு..

போலியோ சொட்டு மருந்து
இளம்பிள்ளை வாதத்தை
தடுக்க சிறந்த மருந்து...

இளம்பிள்ளை வாதம்
போலியோ வைரஸ் கிருமியின் தாக்குதலால் குழந்தைகளுக்கு வரும் சேதம்...

போலியோவை
முற்றிலுமாக ஒழிக்க
நம் இந்திய அரசாங்கம்
அரும்பாடுபடுகின்றது...

போலியோ இல்லாத நாடு
இந்தியநாடு என்ற மைல்கல்லை
எட்டிவிட்டோம் என்ற
பெருமையை தக்கவைக்க...

நாம் நம் குழந்தைகளுக்கு
தவறாமல் கொடுப்போம்
போலியோ சொட்டு மருந்து
அதுவே குழந்தைகள் ஆரோக்கியத்துடன்
வளர சிறந்த விருந்து...

போலியோ இல்லாத
உலகினை நோக்கி
வீரநடைப்போடட்டும்
இந்த உலகம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (28-Jan-18, 7:45 am)
பார்வை : 666

மேலே