இதயத் திருடன்

என் பார்வை உனைக் காென்றதற்கு
நான் என்ன தவறு செய்தேன்
நீ சிரித்தாய் பதிலுக்காய்
நானும் சிரித்தேன்
ரசித்தது உன் தவறா?
கேள்வி கேட்டாய் பதில் தந்தேன்
பிடித்துப் பாேனது யார் தவறு.?
காத்திருந்து பின் தாெடர்ந்தாய்
காணாமல் சென்று விட்டேன்
ஏதும் தெரியாமல்
நாட்கள் நீண்ட பாேது
நட்பென்று நான் நினைக்க
காதல் என்று சாெல்லி விட்டாய்
திருடிய இதயத்தை திருப்பித் தர முடியாதே
களவாடிச் சென்று விட்டான்
நெடுந்தூரம் தாெலைவாக
என் இதயத் திருடனவன்