காதலின் தீபம் 1

திருவிழாவில்
விண்ணைபிளக்கும்
வாணவேடிக்கைகளும்
மேளசத்தங்களும்
மக்களின் நெரிசலில்
வரும் சுதியற்ற தாளங்கள்
போல் சப்தங்களும்
தூரத்து ஒலிபெருக்கியில்
ஒலிக்கும் குத்து பாடலும்
என விழாவே
கலைகட்டியிருந்தாலும்
என் மனதென்னவோ
அமைதியாக அவளையே
நினைத்துக்கொண்டிருக்கிறது...

அவளை நினைக்கும்போது
எனக்கு வேறெந்த ஞாபகமும் வருவதில்லை
பசிக்கூட தெரிவதில்லை
காலம் போவதும் தெரிவதில்லை
அவளை நேரில் பார்த்தால்
பேச நா எழுவதில்லை...

புல்மீது படர்ந்த பனித்துளிகள்
கதிரவனை கண்டதும் மறைந்துபோகிறது
என்மீது படர்ந்த அவளின்
ஞாபகத்துளிகள் எத்தனை
கால மாற்றத்திலும்
மறையாதது...

என் காதலில்
பெருமைப்பட ஒன்றிமில்லை
அவள் இல்லை என்றால்
என் இதயம் துடிக்க மறந்துவிடும்
என்று சொல்வதில் என்ன மகத்துவம்...

ஒரு ஜோசியன் சொன்னான்
உன் காதல் கைகூடாதென்று
நான் அவனை திட்டி தீர்க்கவில்லை
எனக்கு தெரியும் என் காதல்
கோள்களை எல்லாம் கடந்து
ஜெயிக்குமென்று...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Jan-18, 7:31 am)
பார்வை : 128

மேலே