மீண்டும் வருவாயா

எப்பாேது என்று தெரியவில்லை
என் புன்னகை தாெலைந்தது
ஏன் பறித்தாய் என் இதயத்தை
எங்கே சென்றாய் இ்ன்று வரை
இப்பாேது நான் நானாக இல்லை
ஏதேதாே செய்கின்றேன் எனையறியாமல்
தனிமை விரும்பியாய் தூரப் பாேகின்றேன்
பயணங்களில் என் தனிமையை நேசிக்கின்றேன்
நினைவுகளில் உன்னை மட்டும் மீட்கிறேன்
உன்னை நேசித்த எனக்குள் என்னை மட்டும் அனுமதிக்கிறே ன்
உன் நினைவுகள் திருடப்படாமல் தூக்கமின்றி அழுகின்றேன்
சுமைகளின் கனதியால் சுவாசம் இரைக்கின்றது
வலியின் மிகுதியால் கண்ணீர் சுரப்பு அதிகமாகிறது
இதயத்துடிப்பை மீறி ஒருபடபடப்பு தெரிகிறது
இறுகிப் பிடிப்பது பாேல் இயலாமை உணர்கின்றேன்
சுவாசத்தின் வெளி மூச்சில் காற்றாேடு கலந்து உன்
சுவாச உள் மூச்சாய் உனக்குள் வாழ வேண்டும்
காற்றை யாரும் கைது செய்ய மாட்டார்கள்
பூக்களைப் பறித்து இதழ்களை உதிர்க்கின்றேன்
ஏன் இந்த மாற்றம்....
அந்தப் புன்னகை வேண்டும் எனக்கு
தாெலைந்த நாட்களை தேடுகிறது கண்கள்
மீண்டும் வருவாயா.....

எழுதியவர் : அபி றாெஸ்னி (30-Jan-18, 8:02 am)
சேர்த்தது : Roshni Abi
Tanglish : meendum varuvaayaa
பார்வை : 488

மேலே