வெளிச்ச வள்ளல்

வெளிச்சம் போல் தூய்மை
உள்ளத்தில் இருந்தால்
உருவ வழிபாடு
உலகத்தில் வேண்டா

உண்மை ஒளி
உள்ளே பரவினால்
பன்மை மதங்கள்
பாரினில் வேண்டா

கள்ளம் கபடம்
கருத்தினில் களைந்தால்
உள்ளம் என்பதே
உயரிய கோவில்

சாதிகள் வேண்டா
சாத்திரம் வேண்டா
சோதியாய் இறையை
சீவனில் உணர்ந்தால்

எல்லா உயிரும்
எமதுயிர் என்றால்
நில்லா வாழ்விலும்
நிலைபெறு வீரே

பசிப்பிணி போக்கிப்
பலருடன் வாழ்வோம்
உசிதமானது உயிரோம்பலன்றி
உலகினில் வேறிலை

என்று பேசிய ஒருவன்
ஏழைதான் ஆயினும்
வள்ளலாய் ஆனவன்

அவன் நின்று நிலைத்த
நினைவுநாள் இன்று

சமத்துவப் பெரியார்
இராமலிங்க அடிகளார்
வழித்தடம் விரிய
வணங்குவோம் பெரிதாய்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எழுதியவர் : நவீன் இளையா (31-Jan-18, 11:07 am)
Tanglish : velicha vallal
பார்வை : 230

மேலே