காதல்
தென்றலாய் நீ ஆடி வந்தால்
மூங்கிலாய் அசைந்து வந்து
குழல் ஊதிடுவேனே நீ ஆட
மலராய் நீ பிறவியெடுத்தால்
வண்டாய் வந்து உன்னையே
மொய்த்திடுவேன் நான் பின்னே
உன்னுள் உறங்கி கிடப்பேன் நான்
புழுவாய் நீ பிறந்தாலும்
மண்ணாய் இருந்து உன்னை
சுமந்து காத்திடுவேன் நான்
என்னவளே உன்னை என்
நெஞ்சுக்கு குழியுள் சுமக்கிறேன் நான்
நீ இன்றி நான் வேறில்லையே
ஜென்மங்கள் எத்தனை எடுத்தாலும்
நீதானே என்னவள் என்று நானிருப்பேன்
புழுவாய் நீ பிறந்தாலும்
மண்ணாய் உன்னை சுமந்து
காத்திடுவேன் நான்
மலராய் நீ பிறந்து வந்தால்
வண்டாய் வந்துனை நான் மொய்த்திடுவேனே
உன் மடியில் மயங்கி உறங்கிடுவேனே
தென்றலாய் நீ ஆடி வந்தால்
மூங்கிலாய் அசைந்து ஆடிடுவேன்
குழல் ஊதிடுவேன் தென்றல்
உந்தன் ஆட்டத்திற்கு
கடலுள் நீ மறைந்து கொண்டால்
நதியாய் வந்திடுவேன்
உன்னுள் கலந்திடுவேன் நான்