உழைப்பே சிறப்பு

கல் பிறந்தது எதற்காக? என்றேன்.
சிற்பங்கள் செய்து கலை வளர்க்க என்றான்.

கல்லை உடைத்து கஷ்டப்பட்டு சிற்பங்கள் செய்வதற்குப் பதில் சிற்பங்களாகப் பிறந்திருக்கலாமே என்றேன்.
அதில் மகத்துவம் இல்லையடா.
உழைக்காமல் கிடைக்கும் எதுவும் சிறப்பு என்ற பண்பைப் பெற்று பெருமை தாராது என்றான்.

ஓம் நமச்சிவாய...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Feb-18, 8:43 pm)
Tanglish : uZhaippay sirappu
பார்வை : 4206

மேலே