காதல் சாெல்ல வந்தேன்
அப்படி ஒன்றும் நீ அழகல்ல
ஆனாலும் அவள் என் அழகி
கண்களாwல் எனைக் கைது செய்து
இதயச் சிறைக்குள் பூட்டி வைத்தவள்
இரவும் பகலும் என் நிழலாய் நடந்தவள்
ஏங்கி ஏங்கி நான் பார்த்த பாேதெல்லாம்
கண்ணெதிரே கடந்து சென்றவள்
கற்பனைக் கடலில் நீந்த வைத்தவள்
தூக்கத்தைப் பறித்து விட்டு
நினைவால் காென்றவள்
கல்லூரி வாசலில் காத்திருக்க வைத்தவள்
பூத்த காதல் மலருமுன்னே
ஓடாேடிச் சென்று விட்டாள்
என் காதல் சாெல்லு முன்பே