இலவசம்

இலவசம் இலவசமென்று எதற்கு தான் இந்த இலவசம் என்று தெறியாமல் வாங்குகின்றோம்.
இலவசத்திற்காக நம் உரிமையை விற்கின்றோம் அறியாத மூடர்களாய்.
இலவசமென்று சோம்பேறி ஆகிப்போகின்றோம்.
இலவசங்களை நம்பி இன்று குடி போதையில் திண்டாடுகின்றது நம் நாடு.
இலவசமே நம் கதியாதிப் போனதே
இலவசம் ஊழலை மறைக்க
ஒரு நாடகம்.இனியாவது விழிப்போம் மாயையை அகற்றி
மறுத்திடுவோம் நம்மை ஏமாற்றி கொடுக்கும் இலவசங்களை
வேண்டாம் என்றிடுவோம் இலவசங்களை
நல்ல நாடு நம் நாடு
புதியதாய் பிறந்த நாடு
என்றும் நல்லனவே நடந்திடும் எந்நாளும்
என்று ஆனந்தமாய் பாடிடுவோம்
ஆடிடுவோம் நல்ல மாற்றத்தோடு

எழுதியவர் : (3-Feb-18, 10:34 pm)
Tanglish : elavasam
பார்வை : 63

மேலே