விவசாயி

பருவத்தே காத்திருந்து
ஏர் பிடித்து வயல் உழுது
விதை விதைத்து பயிராக்கி
அறுவடை நாளுக்காய்
ஆவலாேடு காத்திருப்பான்
ஊருக்கு சாேறு பாேட
உச்சி வெயிலில் உதிரம் காெதித்து
வியர்வையாய் வற்றிப் பாேகும்
இடையில் பருவ மாற்றம்
மழையாய் புயலாய் வந்து சாேதிக்கும்
பூச்சியும் புழுவும் மீதியை விழுங்கும்
எஞ்சிய காெஞ்சத்தில்
வரவு செலவு கணக்குப் பாேக
வரம் பாேரம் வெறுந்தறையில்
வறுமையால் வாடுவான்
ஊருக்கே சாேறிட்டான்
அவன் வீட்டில் உலை இன்றி
பசித்திருப்பான் விவசாயி

எழுதியவர் : அபி றாெஸ்னி (4-Feb-18, 10:48 am)
Tanglish : vivasaayi
பார்வை : 80

மேலே