மீண்டும் உயிர் கொடுப்போம் தமிழுக்கு

முன்னுரை:
~~~~~~~~~

"மனிதன்" என்ற இனம் முதன் முதலில் தோன்றிய போது தனது உணர்வுகளை வெளிகாட்டவும், பிறரிடம் உரையாடல்கள் மேற்கொள்ளவும் முதலில் "சைகை"-யை பயன்படுத்தினார்கள். பின்னர் காலப்போக்கில் பரிணாமம் வளர்ச்சி அடைந்து வரும்போது அவர்களின் மத்தியில் பல மாற்றங்கள் தோன்றியது. பின்னர் அவர்கள் குரல் கொண்டு ஓசை எழுப்பினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மொழிக்கொண்டு பேசத் தொடங்கினார்கள். அப்படி தொடங்கிய மொழிகள் இன்று உலகில் ஏராளம். அதுப்போன்று மொழிகளில் ஒன்று "தமிழ்". அவ்வாறு தோன்றி வளர்ச்சி அடைந்த தமிழ் மொழியையும், அதன் சிறப்புகளையும் பின்வறுமாறு இக்கட்டுரையில் காண்போம்.


தமிழ் மொழியின் சிறப்பு:
~~~~~~~~~~~~~~~~~~
"தமிழ்"- என்று உச்சரிக்கும் போதே அது ஒரு தாய்மை உணர்வினை நம்மிடம் உணர்த்திவிடுகின்றது. உலகின் முதல் "முதல் மொழி" என்று அனைவரும் போற்றக்கூடிய மொழி தமிழ் மொழியாகும். இத்தமிழ் மொழி முறையான இலக்கணம் கொண்டும், முழுமையான அர்த்தங்கள் கொண்டும் அமைக்கப்பட்ட ஒரு சிறப்பினைக் கொண்டும் அமைந்துள்ள மொழியாகும். அதுமட்டும் இன்றி உலகம் போற்றும் பல கதைகள், காவியங்கள், புராணங்கள் போன்றவற்றை மேலும் தன் சிறப்பினை காட்டுகின்றது. அதேப் போன்று உலக உலக மொழிகளில் வேறு எந்ந மொழியிலும் இல்லாத "ழ" என்ற ஒரு எழுத்தினை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சிறப்பும் தழிழுக்கு உண்டு. முறையான உயிர் எழுத்தும், முறையான மெய்யெழுத்தும், கொண்டு புணர்ச்சியினா மூலம் புதிய வார்த்தைகளை உருவாக்கும் வல்லமை பெற்ற சிறப்புகள் பொருந்திய மொழி தமிழ் மொழியாகும். இதுப்போன்று மேலும் எத்தனையோ சிறப்பினைக் கொண்ட மொழி தமிழ் மொழியாகும்.


தற்காலத்தில் தமிழின் நிலை:
~~~~~~~~~~~~~~~~~~~~
இருபதாம் நூற்றாண்டின் காலக் கட்டத்தில் கி.பி 1967- ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காமராஜர் அரசு தமிழ் மொழி அதிகம் அப்பகுதியில் காணப்பட்டதால் அதற்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டினார். பிறகு கி.பி 1968- ஆம் ஆண்டு ஜனவரி 15- முதல் தமிழ் நாடு (தமிழ் மாநிலம்) என்ற பெயர் நடைமுறைப் படுத்தப்பட்டது. அன்று முதல் தமிழ் நாடு மலர்ந்தது. தமிழ் நாடு என்று பெயர் சூட்டிய போதும் தமிழ் மொழி என்பது தனக்கு மட்டும் உரியது என்று எண்ணாமல் இருந்தது. காரணம். தமிழ் மொழியின் சிறப்பு அக்காலத்தில் உலகின் திசையெங்கும் திருப்பி பார்க்கும் அளவில் இருந்தது. அவ்வாறு ம(ன)ணம் கொண்டு மலர்ந்த தமிழ் நாடும், தமிழ் மொழியும் சற்று மன(ண)ம் வாடத் தொடங்கியது.

அதுப்போன்று தமிழ் மொழி மன(ண)ம் வாடுவதற்க்கு காரணம் வேறு யாரும் இல்லை. நாம் தான். நம் மனம் அந்நிய மொழியின் மீது கொண்ட மோகம் தான். அந்நிய மோகம் என்பது ஒரு வகையில் இயற்கை ரீதியாக அனைவரிடமும் உள்ள ஒன்றுதான். ஆனால் அதனால் நாம் இழந்தவை எண்ணில் அடங்காமல் உள்ளன. அதனால் இன்று ஏற்பட்ட பெரும் விளைவுகளில் ஒன்று. "நம் தாய்மொழியை பிறரிடம் சொல்லும் போது ஏற்படுமா தயக்கமும்" ஆகும். தன்னுடைய தாய் மொழியை உரிமைக் கொண்டாட மக்களில் சிலர் தயக்கம் கொள்கிறார்கள். இதுப் போன்று செய்வது மிகப் பெரிய தவறாகும்.

எதிர்கால வளர்ச்சிப் பாதையில் தமிழ் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தற்காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. இதற்கும் நம்மிடம் ஏற்பட்ட மாற்றங்கள் தான் காரணம். எடுத்துக்காட்டாக தற்போது இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் என் உறவுகளிடம் ஒன்று கேட்கிறேன். நம்முள் எத்தனை நபர்கள் தினசரி குறுஞ்செய்திகளில் காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று அனுப்புகின்றீர்கள்?.பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால் கூட பிற மொழிதான் தேவைப்படுகின்றது. மீதம் தமிழை தேடுபவர்கள் யார் யார் என்று விரல் விட்டு எண்ணிப் பார்த்தால் கூட பெரும்பான்மை கிடையாது. நம் நாட்டில் பாரதியார், பாரதிதாசன், சுவாமி மறைமலை அடிகள் போன்ற எத்தனயே "எழுத்தாளர்கள், கவிஞர்கள், புலவர்கள் தமிழ் நாட்டில் பிறந்தும், தமிழின் மேல் பற்றுக் கொண்டும் தமிழுக்காகவே தங்களை அற்பணித்துக் கொண்டார்கள். இவர்கள் அனைவரும் தமிழின் மேல் "காதல்" கொண்டிருந்தார்கள். ஆனால் அதே சமயம் அந்நிய மொழிகளையும் கற்றுத் தெரிந்து இருந்தார்கள்.

அந்நிய மொழிகள் பலக் கற்று இருந்தாலும் அவர்கள் எங்கு சென்றாலும் என் தாய்மொழி "தமிழ்" வீரம் கொண்டு உரைத்தார்கள். அதுப்போன்று வீரம் இன்று நம்முள் பலருக்கு இல்லாமல் போய்விட்டது. இந்த மாற்றத்திற்கும் நாம் தான் காரணம்.

நாம்கூட பிற மொழிகளை அதிகம் கற்று அறிந்து கொள்ளலாம். அதனை தெரிந்து கொள்ளலாம். நம் தாய் மொழி தமிழ் என்பதற்கும், தமிழ் மக்கள் என்பதற்கும் நாம் எப்போதும் பெருமை சேர்க்க வேண்டும். "தமிழால் தமிழன் வளர வேண்டும். தமிழனால் தமிழ் என்றும் வளர வேண்டும்.

முடிவுரை:
~~~~~~~~~
தாய் இன்றியும், தந்தை இன்றியும் தானக பிறந்தேன் என்று சொல்லிக் கொண்டு எந்த தனி ஒருவனாலும் முன் வரமுடியாது. அதுப் போலதான் அந்நிய மொழியினை ஆயிரம் கற்று இருந்தாலும் அவர் அவர் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் தாய் மொழி எது என்று. அதை ஒரு போதும் அவர்களால் மறைங்க முடியாது.

உலகின் எல்லாப் பக்கங்களிலும் சிதறி கிடக்கும் "என் தமிழ் உறவுகள் ஒன்று சேர்ந்தால் போதும்" இந்த உலகம் மட்டும் இல்லை. அந்த வானமும் நம் கைகளில் வசப்படும். கைக்கொடுக்க யாரும் இல்லையென்று கவலைப் பட வேண்டாம். பிறருக்கு நாம் உறுதுணையாய் இருப்போம். நமக்கு பிறர் உறுதுணையாக இருப்பார்கள். ஒன்று படுவோம். ஒற்றுமையாய் வாழ்வோம். அந்நிய மொழியின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவைக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்தி விட்டு. அன்னை என்னும், அன்னையின் மொழி தமிழ் என்றும், "தமிழ் மொழிக்கு அடையாளம் கொடுப்போம்".
"மீண்டும் உயிர் கொடுப்போம் தமிழுக்கு".
வாழ்க தமிழ்...!
வளர்க தமிழ் மக்கள்...!!
வாழ வைப்போம் தமிழ் மக்களை...!!


( இக்கட்டுரையில் பதிக்கப்பட்டு இருப்பது எனது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டும் இல்லை. என்னுடன் உறுதுணையாக நிற்கும் நண்பர்களின் கருத்துக்களும் கலந்துள்ளது. எனவே அவர்களுக்கும் இன்று நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.)

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (4-Feb-18, 12:00 pm)
பார்வை : 1771

மேலே