நண்பன் அவன் தெய்வம்
தீயோர் சேர்க்கையில்
விதியின் பெருவசத்தால்
கட்டுண்ட நான் , ஐயகோ
நல்ல என் நண்பனை
தீச்சொல்லால் திட்டித் தீர்த்தேன்
அவனைவிட்டு தூர தூர விலகிச்
சென்றேன், அந்த தூயவனோ
நான் எத்தனை அவனை வெறுத்தாலும்
ஏதும் பொருட்படுத்தாது
நிழல்போல என் பின்னே
தொடர்ந்தான், நல்ல தருணத்தில்
இருளெனும் மாயமாம் என்னுடன்
அலையும் தீயோரை அவர்கள்
யார் என்பதை தெளிவுபடுத்தி
'முதலை வாயிலிருந்து'காப்பாற்றினான்
என்னை , இந்த முதலைகள் வாயில் இருந்து,
நட்பின் சிகரம் என்னை வாழவைத்த அவன்.
என்னை வாழவைத்த தெய்வம்
நண்பன் வடிவில்