நானும் எனது லட்டுவும்....
..#நானும்_எனது_லட்டுவும்....
எனக்கு மிகவும்
பிடிக்கும் இந்த லட்டுவை
மஞ்சள் நிலா அது
மத்தியில் ஒரு இருட்டு திராட்சை
உருண்டையான ஆசை
ஐந்து ரூபாய் தான்
அதனை வாங்கி சுவைத்திடும்
போது அத்தனை பேரானந்தம்
மெல்ல கடித்து வாய்க்குள் தள்ளி
ரசித்து மென்றுசுவைத்து
தொண்டயிலிருந்து விழும்
பொழுது இருக்குமே ஒரு
வாழ்வின் நிம்மதி ஷப்பா
பெருமூச்சொன்றில் அடங்கியிருக்கும்
அந்த அலாதி சந்தோஷம்
எனக்கு மட்டுமல்ல இந்த லட்டுவை
விரும்பும் அனைவருக்குமே இருக்கும்
பிடித்தவைகளை பிடித்த
நேரத்தில் பிடித்தமான ஒன்றாக்கி
அமைத்துகொள்வதில் இருக்கிறது
இந்த வாழ்க்கையின் அழகு வேறென்ன
வேண்டும் இந்த உலகில் நலமுடன் வாழ....
.##சேகுவேரா சுகன்.....