காதல் காயம்
நான் உன் காதல் யாசிக்கும் வரை,
மாமலை ஏற்றமும் தரைதளமாக தெரிந்ததே/😊
ஆர்ப்பரிக்கும் அலைகடலும் ஊர்க் கேணி ஆனதே/😊
நூறடி நடந்தால் ஓரடியாய் தோணுதே/😊
கட்டாந்தரை தூக்கம் பஞ்சு மெத்தை சொர்க்கம் ஆனதே/😊
ஆனால் இன்று உன் காதல் இல்லை என்றதும்😚😢
பிஞ்சுக்கால் நெஞ்சுதைக்கும் போது இடியாய் இறங்கியது/😢
ஒவ்வொரு நொடியும் யுகமாக கழிகிறது😢
கை விசிறி காற்றும் சூறாவளி ஆகிறது😢
அடுத்தவன் மூச்சு காற்றுகூட எரிமலையாக எரிகிறது😢
சந்தன வாசமும் சாக்கடை நாற்றம் ஆகிறது😢
வானில் என் முன்னோர் முகம் அசைந்தாடுகிறது😢
உன் மணப்பந்தியில் பாயாசம் விஷமாக இறங்குகிறது😢
உடலிங்கே,என் உயிரெங்கே தெரியவில்லை😢
இடுகாடு விட்டெழுந்த பிணமாக ஊருக்குள்
நடைப் பிணமாக நடமாடுகிறேன்😢
சுடுகாடு கொண்டெனைச் சேர்க்கும் வரை
மூச்சுக்காற்று கூட மூக்கின் மேல் மணல்
மூட்டை வைத்து அழுத்தியது போல் திணறுகிறதே😢
உனை பிரிந்து என்உயிர் துறக்க காத்திருக்கிறேன்😢