கோப்பெரும்சோழன்-பிசிராந்தையார் நட்பு

அவன் சோழ நாட்டிற்கதிபதி
மாமன்னன்,வல்லவன்
குணத்திலும் சிகரம்
அவர் புலவர்
சங்கத்தமிழ்க் கண்ட
பெரும் புலவர்
குண சீலர் பாண்டிய நாட்டவர்
மன்னவனுக்கு புலவரை
கண்டு நட்பு கொள்ள பேரவா
புலவருக்கு மன்னனோடு நட்பில்
இணைய பெரியதோர் ஆசை
ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே
இவர்கள் நட்பு வளர்ந்தது
நாளொருமேனி பொழுதொரு வண்ணமாய்;
சோழமன்னன் அவன் மக்கள்
அந்தோ தந்தையைகொன்று
நாடுபறிக்க சாதியில் ஈடுபட
மன்னன்அவன் மனம் நொந்து
தன்னுயிரை மாய்த்துக்கொள்ள
நினைத்தான்;' வடக்கிருந்தான்'
மனதால் நட்பு மிக வளர்த்த
புலவர், பிரானுக்கு தன பக்கம்
ஓர் இருக்கை வைத்து புலவர்
வருகைக்கு காத்திருந்தான்
உன்னது, உறங்காது ; செய்தியறிந்த
அப்புலவர் பிரானும் துடிதுடித்துப்போய்
பாண்டியநாட்டு 'பிசிறிலியிருந்து'
சோழநாட்டு தலைநகரம் உறையூர்
வந்தடைந்து தன மானசீக நண்பனை
சோழமாமன்னன்,கோப்பெரும்சோழனை
நேரில் கண்டு மன்னனுடன் வடக்கிருந்து
இருவரும் உயிர் நீத்தனரே , ஈருடல்
ஓருயிராய் இருந்த இதற்குமுன்
ஒருவரை ஒருவர் பார்க்காத இவ்விருவர்,
கோப்பெரும்சோழன்-'பிசிராந்தையார்'
என்னென்பது இந்த நட்பினை !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Feb-18, 6:42 am)
பார்வை : 254

மேலே