கனவாமோ

மண்ணில் விழுந்தமழை மனிதற்கே அன்றோ? இதை
எண்ணிப் பாராமல் ஏய்ப்பதுவும் நன்றோ?
கன்னிக் காவிரிப்பெண், ஏங்கிக் கலங்குவதும் நன்றோ - அவள்
காதற் கணவனந்த வங்கம் காண்பதுவும் என்றோ?
அப்பெண்வீடு வந்தாலே கழிப் பேரின்பம் நமதன்றோ - சற்றே
பேயாட்டம் ஆடிடினும் அவள் பெறற்கரிய மகளன்றோ?
தாய்வீட்டில் சிறைப்பட்டு அணைக்கட்டில் தவிக்கிறாள் - தன்
தாளாத துன்பத்தால் தண்மேனி குறுக்கின்றாள்
மற்றவீடு என்றாலும் மணாளன்தன் மனையன்றோ - பெண்
பெற்றவீட்டு பெருமையெல்லாம் புகுந்தவீட்டின் வளத்திலன்றோ?

சம்மந்திச் சண்டையெல்லாம் சந்திவரல் இழிவன்றோ? - இதில்
சர்வமந்த சாக்காடு சந்ததிக்கே, மெய்யன்றோ?
மாரியீந்த நீர்யாவும் மக்கட்குப் பொதுவன்றோ - சில
மாந்தர்வகு எல்லையெலாம் மழைக்கென்றும் பொருட்டொன்றொ?
மருமகளைத் தாஎன்று கேட்பதுவும் களவாமோ? - இந்த
இருவீட்டார் இடர்தீர்த்து இணைவதுவும் கனவாமோ?!

எழுதியவர் : சுரேஷ்குமார் (7-Feb-18, 1:11 am)
பார்வை : 595

மேலே