நீங்கள் அணிந்திருப்பது நிறைகளா குறைகளா
கெடுமதி கொண்டவன் மனிதனேயன்றி வேறெதும் உலகத்தில் இல்லை.
மற்ற விலங்குகள் தற்காப்புத் தான் மற்றதைக் கொள்ளும்.
மனிதனுக்கோ கொல்வது மட்டுமே வேலை.
சிறு பூச்சியைக் கண்டால் காலால் நசுக்குவான்.
பலங்கொண்ட யானையை சூழ்ச்சியால் வீழ்த்துவான்..
கேட்டால் நாம வாழனும்னா எதுவும் தப்பில்ல என்று கதாநாயகனைப் போல் வசனம் பேசுவான்.
கடைசியில் தெருநாய் போல் செத்துக் கிடப்பான்.
அன்பில்லா பிணங்களே!
உடலோடு உடல் உரசி உரசி உறவாடிப் பயனில்லை மனதில் விரோதம் கொண்டிருப்பதாலே.
பணத்தைத் தேடி ஓட்டப்பந்தயம்.
ஓடிக் கொண்டே இருக்கையில் பக்கத்தில் ஓடுபவனின் கால் குறுக்கே வரும்.
இடறி விழ நேரிடுகிறது.
உலகமென்ற மைதானத்தில் கமான்! கமான்! ஓடுங்கள். ஓடுங்கள். என்று பணத்தைத் தேடி ஓடத் துரத்தும் பேராசியர்க் கூட்டங்களே?
உங்கள் அறிவிற்கு என்னவாயிற்று?
எம்.இ என்ற பட்டம் தின்று விட்டதா?
உங்கள் சிந்தனைத் திறன் எங்கே?
எம்.பி.ஏவில் விலை போகிவிட்டதா?
உங்கள் நிலையை சிந்தித்துப் பார்க்கையில், " மாறாதையா மாறாது, மனமும் குணமும் மாறாது. ",என்றே பாடத் தோன்றுகிறது.
நீங்கள் நிறைகளாக நினைத்து குறைகளை அணிகிறீர்கள்...