பற்ற வைத்தது யார்
பற்ற வைக்காமல் நெருப்பு எப்படிடா வந்தது?
எதிர்காலத்தை கணிக்கும் சோதிடனின் வார்த்தைகளில் வாழும் மனிதக் கூட்டமே!
பதில் சொல்லுங்களடா?
பற்ற வைக்காமல் நெருப்பு எப்படிடா வந்தது?
தவளைக் கவ்விய பாம்பினைப் போல மனிதனைக் கவ்வும் மனிதப்பூச்சிகளே!
அறிவுள்ள நீங்கள் ஆடும் ஆட்டம் படு ஜோர்.
பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்..
நம்பிக்கையோடு விளையாடி, நம்பிக்கையோடு உறவாடி,
நம்பிக்கைத் துரோகம் செய்யக் காத்திருக்கும் மனிதக்கூட்டமே!
என் முதுகில் கத்தியால் குத்துவீர்களா? அல்லது துப்பாக்கியால் சுட்டுவீழ்த்துவீர்களா?
எது நடந்தாலும் மகிழ்ச்சி தான்.
மீண்டும் பிறந்து வருவேன்.
புதிய ரூபம்!
புதிய உடல்!
அப்போ என்ன செய்வீர்கள்?
அட! இவன் விட்டான் என்று கொள்ளை இன்பம் கொண்டோமே! பாவி மீண்டும் வந்துவிட்டானே!
எப்படிடா இவனை அழிக்கலாம்?
பெண்ணைக் கொண்டு மயக்கலாமா?
பொன்னைக் கொண்டு கவிக்கலாமா?
பணத்தைக் கொண்டு வாங்கலாமா?
இப்படியே உங்கள் எண்ணம் அலைபாய்கிறது.
உங்கள் பொறாமையின் தீச்சுவாலை கொழுந்து எரிகிறது.
ஆ! வெப்பம், தேர் எரிகிறது! கோயில் எரிகிறது! கடைகள் எரிகிறது!
காரணமென்ன?
பற்ற வைத்தது யார்???