முதுமையின் வலிகள்

முதுமை.....
இளமையின் நினைவை.....
எரிந்த சாம்பலாய்.....
சுமர்ந்து கொண்டிருக்கும்....
சுமைதாங்கி..........!

மரணத்தின் வாசலை.......
ஏக்கத்தோடும் பயத்தோடும்.......
வரவேற்றுக்கொண்டிருக்கும்......
மர்ம அறை............!

அனுபவங்களை.......
முற்களாகவும்......
பூக்களாகவும்......
ரசித்துக்கொண்டிருக்கும்.....
ரோஜாச்செடி.....!

வார்த்தைகளின்.....
வீரியமும்.......
இன்பங்களின்.......
வீரியமும்......
அடங்கியிருக்கும்.......
பெட்டிப்பாம்பு..........!

எழும்பு கூட்டை.....
தோலால் மறைத்து வைத்து......
கிறுக்கள் சித்திரத்துக்கு......
உயிர் கொடுக்கும்.....
உன்னதமான உயிர்.........!

நூறு மீற்றர் ஓட்டத்தை......
நொடிக்குள் ஓடியவனும்.....
மெதுவாக நடக்க ....
கற்றுக்கொடுக்கும் ஆசான்......!

கொரட்டைத்தான் .......
மூச்சு பயிற்சி........
இருமல் தான் செய்தி.....
தொடர்பாளன்........!

அனுபவத்தை மூலதனமாய்......
கொண்டு ஞானியாகும் நிலை.....
அனுபவத்தை தவறாக கொண்டு......
பித்தனாகும் நிலை.......
முதுமை.....................!

@
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (9-Feb-18, 6:52 am)
Tanglish : muthumaiyin valikal
பார்வை : 77

மேலே