எளிதினில் கிடைக்கா அரிய அமிழ்தே

எங்கள் சிகரமே
அரிய கிடைக்கும் அமிழ்தினும் மேலே
உயர பறக்க செங்கோல் கொடுக்கும் மாணிக்கமே
இயற்கையை தத்தெடுத்த அருங்காவியமே
அறிவியலை எளிமைபடுத்திய எங்கள் தாயே
மண்ணும் பொன்னாகும்
செழுமையும் சிறப்பாகும்
உன்னோசை கேட்டால்
தாயும் நீயே
எங்கள் குழந்தையும் நீயே
வரும் பகலவன் நீயே
ஒளி தரும் நிலவும் நீயே
உயிரும் நீயே
உறவும் நீயே
உதிரத்தில் உறம் நீயே
காணும் நிலமெல்லாம் உன் பெருமை ஒங்கிடவே
எம் தமிழே
எங்கும் செழித்தாயே
வீரத்தை எங்கள் பெண்ணின் உருவாய் வைத்தாய்
பூமித்தாயின் பொருமையை எங்கள் அன்னைக்கு அழகூட்டினாய்
மறத்தமிழே
வீரமும் விவேகமும் எங்கள் அரும்மருந்து என்று உலகிற்கு எடுத்தூட்டினாய்
எங்கள் கவித்தமிழே
நீ வாழிய வாழியவே

எழுதியவர் : பிரகதி (10-Feb-18, 10:47 am)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 345

மேலே