கேள்வி

நீண்ட காலத்தின் ஒவ்வாமையை
நிம்மதி இன்றிக் கடந்தான்.

எதுவும் பெரிதாய்
செய்ய முடியவில்லை என்பது
அவன் பிழையா?

அறத்தின் பிடியில்
அலங்க மலங்க விழித்தான்.

சம்பாத்தியம் என்பது
சாமர்த்தியத்தின் பாற்பட்டது
யார் தவறு?

இருட்டை வெளிச்சமென்று
நினைத்துக் கொண்டல்ல
நம்பியே
காலம் பலவாகிவிட்டது.

நல்ல நீரில்
சாக்கடை கலந்து
நாளாகி விட்டது.

வாழ்க்கை என்ற அர்த்தத்தில்
கசடு பொதிந்திருக்கிறது.

எவனை, எவன்
கேள்வி கேட்க?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (10-Feb-18, 6:51 pm)
Tanglish : kelvi
பார்வை : 76

மேலே