வஞ்சித் தாழிசை
================
நற்றிரம் கொண்டு
கற்றிடுங் கல்வி
வெற்றியை வாழ்வில்
பெற்றிடச் செய்யும்.
பற்றினை வைத்துக்
கற்றிடு வோர்க்கு
முற்றிலும் கல்வி
அற்புதம் செய்யும்.
கற்றவ ராலே
சுற்றுமிப் பூமி
உற்றதைப் பார்த்துச்
சற்றுனை மாற்று.
.
*மெய்யன் நடராஜ்