பெண் குழந்தை
தேன் மிதக்கும் வானிலே
இன்று பூத்த வெண்ணிலா
பால் சுரக்கும் சோலையில்
கால் பதித்த வெண்புறா
தென்றல் உன்னை தீண்டத்தானா
தினம் தவம் கிடந்ததோ
திங்கள் உன்னை காணத்தானா
வான்வழி பொழிந்ததோ
சிகரம் என்ன உயரம்
உன் வருகை கண்ட பிறகும்
சிலைகள் அழகு குறையும்
உனக்கு ஈடு இல்லை எதுவும்