Vijayakumar K - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Vijayakumar K |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 04-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 371 |
புள்ளி | : 13 |
தீபமென்றே நினைத்தோம் காட்டுத்
தீயென மாறினாயே உன்
தாகம்தனை தீர்க்க உயிர்த்
தேகங்களில் ஏறினாயே
கார்த்திகையில் தீப ஒளியாய்
ஐப்பசியில் தீபாவளியாய் உன்னை
கொண்டாடிய கரங்கள் இன்று
உன்னோடு மாய்ந்ததென்ன
ஏன் இந்த கோபம்
யார் செய்த பாவம்
அன்று பிஞ்சுகளின் அலரலாய்
இன்று இளைஞர்களின் அழுகுரலாய்
காட்டை அழித்த தீயே உன்னை
எங்கள் கண்ணீரால்
அனைக்கிறோம்
இன்று போ ...
இனியும் வராதே.
விளையாட்டு களம் கண்ட கண்கள்
போர்க்களம் காணுதே
யார் களம் மாற்றினாரோ
வீரம் என்றே கருதி உன்
குருதி தனை ஏந்தி
தன் பலம் காட்டினாரோ
சோகம் தனை போக்க
தாய்வீடு போகலாம் இன்றதுவும்
சுடுகாடு ஆனதோ
கல்லில் கூட ஈரம் உண்டு
கடவுளே உனக்கு ஏன் இல்லை
அவள் கதரல் கேட்டும் கூட
ஈழத்தில் பிறந்திருந்தால்
என்றோ நீ இறந்திருப்பாய்
சிரியாவில் பிறந்ததால்
இன்று நீ இறக்கிறாய்
சென்று வா
மறுபிறவி எடு ,
சாதியில்லா மதமில்லா
பண வெறியில்லா
பதவி போதையில்லா
தேசமொன்று உன்டெனில்
அகம் புறம் அதை
கான ஒரு கணம் வரும், என்
மனம் குணம் உனை
தேடி புது வழி பிறந்திடும்
தினம் தினம் உன்
பார்வை என்னை படர்ந்திடும்
வரம் வரும் என்றே
என் கரம் உன்னை தொழுதிடும்
நெற்றியினை உன் விரல் தடவ
அது திருநீராய் நிதம் தெரிய
கண்ணாடியும் அதை கட்சிதப்படுத்த
என் கவனமோ அதில் சிதைந்திடும்
எனக்கான புன்னகையும் ,எனைக்
கடக்க நேரம் கொள்ளும் சிறுநடையும்
திரும்பிப் பார்க்கச் சொல்லும் இரு விழியும்
கொஞ்சம் கொஞ்சமாய் எனைக் கொன்றிடும்
கண் இமைக்கும் நேரத்தில்
கலந்து விட்டாய் என்னிடம்
வாய்ப்பொன்று கொடுத்துப் பார்
என் வாழ்க்கையே உன்னிடம்...💘
அருகே அமர்ந்து பேசுகையில்
அணுவும் கோபம் கொள்ளுதடி..
நீஎன் கை கோர்க்கையில்
வானும் என்னை தீண்டுதடி..
அகிலமும் பொறாமை கொள்ளுதடி..
காரணம் நீ என் தோழியடி
உனக்கு நீயே விதிக்கும்
மரணதண்டனை...
காதலி இல்லாமல் ஒரு கவிதை...
ஆனால் காதலுடன் எழுதப்பட்ட கவிதை...
என் நண்பனுக்காக..!
நண்பர்கள் (11)

யாழ்வேந்தன்
திருவண்ணாமலை

ப்ரியாஅசோக்
கோவூர்-சென்னை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
