கனவு தேவதை
அகம் புறம் அதை
கான ஒரு கணம் வரும், என்
மனம் குணம் உனை
தேடி புது வழி பிறந்திடும்
தினம் தினம் உன்
பார்வை என்னை படர்ந்திடும்
வரம் வரும் என்றே
என் கரம் உன்னை தொழுதிடும்
நெற்றியினை உன் விரல் தடவ
அது திருநீராய் நிதம் தெரிய
கண்ணாடியும் அதை கட்சிதப்படுத்த
என் கவனமோ அதில் சிதைந்திடும்
எனக்கான புன்னகையும் ,எனைக்
கடக்க நேரம் கொள்ளும் சிறுநடையும்
திரும்பிப் பார்க்கச் சொல்லும் இரு விழியும்
கொஞ்சம் கொஞ்சமாய் எனைக் கொன்றிடும்
கண் இமைக்கும் நேரத்தில்
கலந்து விட்டாய் என்னிடம்
வாய்ப்பொன்று கொடுத்துப் பார்
என் வாழ்க்கையே உன்னிடம்...💘