எங்கள் நதி
கண்ணாடி மணற்பரப்புகளில
கூழாங்கற்களுடன் மீன்களும் கொஞ்சி
விளையாடும்வரை
களங்கப்படாமலேயே இருந்தது
எங்கள் ஊர் ஆறு
உடைந்து தொங்கிய மரக்கிளைகளில்
காலூன்றி நதிக்குள் புதையும்வரை
பாய்ந்தெழுந்த போதெல்லாம
சிற்றலைகள் வீசி புன்னகைத்த்தோடு சரி
கரையோற நாணல்களோடு
விரல்கள் கோர்த்து நீர் அள்ளியதுவரை
ஆறு ஆறுதலாகவே இருந்தது
எங்களுக்கு .........
கரும்புகையும் கழிவுகளும் கொட்டும்
தொழிற்சாலைகள் முளைக்கும்வரை