கொஞ்சம் இன்பம் கொஞ்சம் வலி

உன் விழி யென் நித்திரையை களவாட
உன் நினைவுகள் யென் இரவுகளோடு யுத்தமாட
இவ்வெள்ளைத் தாள்கள் வைகறையில் முத்தங்களாக யாசிக்க
நானும் யோசிக்காமல் கொடுத்து விட்டேன் கவிதைகளாக!

மரணத்தின் வாயில் கதவுகள் மெல்லத் திறந்தும் மூடியும் உயிர் புகாம லிசைப்பது போல்
வலிகளிலே சில ஆனந்தம்
ஆனந்தத்திலே சில வலிகளென
இரண்டறக் கலந்து யென் நரம்பினைப் பூட்டி யிசைக்கிறாளே ஓயாத ஓர் இசை!
என் மனமோ அந்த இறவா வலியெனும் இசையில் இசைந்தாடும் நடனம்!
அவள் மனமோ கவிதையி லெழுந்த இசையிலும், இசையிலெழுந்த நடனத்திலும் கரைந்திடாத கல் நெஞ்சம்!

இரும்புச் சிறை யென்றால்
வெந்தலலென வுருமாறி உருக்கிடலாம்
கல் நெஞ்சை தமிழ்மகள் சொல்லெடுத்து கவிமழை பொழிந்தே
கரைய முற்படுகிறேன்!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (13-Feb-18, 11:02 am)
பார்வை : 1006

மேலே