காதல் விதை
உன்னில் என் அன்பு விதைத்தேன்💖
அது காதலாக முளைக்கும் என்று💖
நம்பித் திளைத்தேன் மகிழ்ச்சியில்💖
காதல் தழைக்கும் என்ற எண்ணத்தில்💟
ஊரெல்லாம் சொல்ல விழைந்தேன்
காதலால் உயிர் விளைந்தேனென்று!
நிலவும் கூட தேய்ந்து சில நாள்
மறைகிறது🌝
நம் காதல் நிலவும் வானும் ஆட்சி செய்யும்🌝
இந்தஊரும்உலகமும் அதற்கு சாட்சி
சொல்லும்💟
வான் மழையும் பொய்த்து விடும்💟
நம் காதல் மழை புயலாய் அடிக்கும்!
உறுதி கொண்ட நம் காதலால் காதல்
இவ்வுலகில் உறுதியாக வாழும்💟
மனிதர் இறந்தால் உறவுகள் பிரியலாம் ஃ
ஆனால், காதலர் மறைந்தாலும்💖💖
காதல் என்றும் மறைவதில்லை💖💖